title


உதிரிப்பூக்கள் - ஒரு பகிர்வு

முன்குறிப்பு

சர்வ நிச்சயமாய் இந்த பதிவு "உதிரிப்பூக்கள்" பற்றிய விமர்சனமல்ல.மாறாக இது ஒரு பகிர்தல் அவ்வளவுதான்.

உதிரிப்பூக்கள் - ஒரு பகிர்வு

ஏறத்தாழ ஆறேழு ஆண்டுகளாக நட்பு வட்டத்தில் சினிமா பற்றிய பேச்செழும்போதும், பல திரைவிழாக்களின் போதும் பெரிதும்சிலாகித்து சொல்லப்ப்ட்ட படைப்பு இயக்குநர் மகேந்திரனின் "உதிரிப்பூக்கள்". சரி அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கு என இந்த வாரம் சி.டி (ஒரிஜினல் தாங்க) வாங்கிப் பார்த்தேன்.அசந்து போனேன்.

நலிந்த நிலையிலிருக்கும் தன் மனைவியின் குடும்பத்தை காப்பதாக கூறி , மனைவியின் தங்கை மீதான தன் ஆசையை வெளிப்படுத்தும் பொறுப்பில்லாத கணவன்.அதனால் மனம் வாடும் மனைவி.இதற்க்கிடையில் ஒரு மெல்லிய காதல்.சின்ன சின்னதிருப்பங்கள்.அதிர வைக்கும் முடிவு.இதுதான் கதை.

ஆனால் கதை நகரும் விதத்தில் இயக்குனரின் திறமை நன்கு புலனாகிறது.மிக மிக பொருத்தமான பாத்திரங்கள் அருமையான ஒளிப்பதிவு,இயல்பான வசனம், அற்புத இசை என ஒரு உன்னத அனுபவம் ஏற்படுகின்றது.காட்சி அமைப்புகளில், சின்னச் சின்ன சம்பவங்களால் பாத்திரங்களின் குணநலனை புரிய வைப்பதில் என அனைத்திலும் அசத்திவிட்டார் இயக்குநர்.

எத்தனையோ இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் , இனி வந்தாலும் தான் ஒருவர் மட்டுமே ராஜா என அழுத்தம் திருத்தமாக இளையராஜா நிருபித்துள்ளார். பாடல்களை விட பின்னனி இசை மிக மிக அருமை.

உலுக்கி எடுக்கும் இறுதிக்காட்சியும் அதற்கேற்றவாறு அதிரும் இசையும்,நேர்த்தியான இறுதி வசனமும் படத்தின் சிறப்புக்கு பெருமை சேர்க்கின்றன.

பின்குறிப்பு

படம் முடிந்தபின் எனக்கு தோன்றியது....

நான் கேள்விப்பட்ட செய்திகள் மற்றும் இப்படம் குறித்த சிலாகிப்புகள் என எல்லாவற்றிற்கும் மிக மிக பொறுத்தமான ஒரு உன்னத படைப்பு தான் "உதிரிப்பூக்கள்".

No comments: