title


குருவாயூரப்பா...

குருவாயூர் கோவிலுக்குள் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் நுழைய அனுமதிப்பதா வேண்டாமா? என கேரளத்தில் மிகச் சூடான விவாதம் களை கட்டுகின்றது.

இதுநாள் வரை பெரிய அளவில் அரசியல்வாதிகள் தலையிடாத இந்த விசயத்தில் , இப்போதைய சர்ச்சையை துவக்கி வைத்தவர் கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன். அவரின் இத்தகைய செயல்பாடுகள் வெறும் விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கம் மட்டுமே என முணங்குபவர்களும் உண்டு. என்ற போதிலும் இது ஒரு வரவேற்க்கப்பட வேண்டிய விசயம்.

கல்வியறிவு,பெண்ணுரிமை என முற்போக்கான விசயங்களுக்கு பெயர் போன கேரளம் , இந்த விசயத்தில் காலம் காலமாக மிகத் தவறான பாதையில் செல்கின்றது. மனிதர்களைப் பார்க்காமல் மனங்களைப் பார்க்காமல் வெறுமனே மதத்தை மட்டும் கணக்கில் கொள்வது எந்த வகையிலும் முறையல்ல.

இதே குருவாயூரப்பன் மீதும், சபரிமலை ஐய்யப்பன் மீதும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளவர்தான் திரு.யேசுதாஸ். அவர் அந்த வகையில் கடவுளுக்கு ஏனைய இந்துக்களுக்கு நிகராக பணிபுரிந்தவராகிறார். அப்படியிருக்கையில் மதம் குறித்த விவாதங்கள் அர்த்தமற்றுப் போகின்றன.

பெரும்பாலான கேரள மக்களும் இந்த விசயத்தில் திரு.யேசுதாஸுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதாக அமைச்சர் கூற , ஆகம விதிகளை காட்டுகிறாராம் தந்திரி.

இந்த தந்திரி-மந்திரி சண்டைக்கிடையே தனக்கு மட்டும் சிறப்பு அனுமதி வேண்டாம், தன்னைப் போன்ற மற்றவர்களுக்கும் என்று அனுமதி கிடைக்கின்றதோ அன்றே தானும் தரிசித்துக் கொள்வதாக கூறியுள்ளார் திரு.யேசுதாஸ்.

"பிறப்பால் மனிதனின் தன்மையை நிர்ணயம் செய்வது தவறென்பதை ", என்று இந்த மூடர்கள் உணரப்போகின்றார்கள் ?.

குறைந்த பட்சம் அந்த குருவாயூரப்பனாவது இவர்களுக்கு புரியவைக்கலாம் , அப்போதுதான் தன் மீது பாடப்பட்ட பாடல்களுக்கு தக்கதொரு பரிசளிப்பவராகிறார்.

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! - குறைந்த பட்சம் கடவுளாவது புரிந்துகொண்டால் பரவாயில்லை.
நன்றி.

(நன்றி : தட்ஸ் தமிழ்)

No comments: