title


லாரா ஓய்வு - சச்சினுக்கு ஆதரவு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது மற்றும் தன் இறுதி ஒரு தின போட்டியில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாமல் போனது (18 ரன்கள் - ரன் அவுட்) மற்றும் உலகக்கோப்பையில் தொடர் தொல்விகள் (- இது கொஞ்சம் பழைய சோகம் ) என அதிகப்படியான கவலைகளுடன் முடிவடைந்தது லாராவின் கிரிக்கெட் வாழ்க்கை.



கண்ணீர் மல்கும் கண்களுடன் விடை பெற்ற லாரா செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தன் நன்றிகளைத் தெரிவித்தார்.தனது இப்போதைய தேவை ஓய்வு எனக்குறிப்பிட்ட லாரா இனி தான் குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிட இருப்பதாக தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் தரத்தை மேம்படுத்த தான் விரும்புவதாக குறிப்பிட்ட அவர் , இது குறித்து எந்த நேரம் வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்றார்.

தான் ஓய்வு பேற்ற போதிலும் தன் முழு ஆதரவை சச்சின் டெண்டுல்கருக்கு தந்த லாரா தன் பேட்டியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்...

"சச்சின் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் , அவர் என்ன செய்ய முடியுமென அவருக்கு மிக நன்றாக தெரியும். இந்த உலகக் கோப்பை அவருக்கு ஏமாற்றம் அளித்த போதிலும் அவர் அடுத்த உலகக் கோப்பை வரைகூட விளையாடலாம் "

மேலும் சச்சின் மைதானத்திற்கு உள்ளேயும் , வெளியிலும் இனிமையாக பழகக் கூடியவர் என லாரா தெரிவித்தார்.

நன்றி.

(நன்றி : cricketnext )


No comments: