title


மாயலோகம்


மெல்ல அருகில் வந்து
நெருங்கி அமர்ந்து
கண் பார்த்து
அப்பா…. டூஎன்றவாறே
விலகிச் செல்கிறான் !

இரு நிமிடங்கள்
இரண்டே நொடிகள் - அல்லது
அதற்கும் குறைவான
நேரத்தில் மீண்டும்

மெல்ல அருகில் வந்து
நெருங்கி அமர்ந்து
கண் பார்த்து
அப்பா…. பழம்என
மெல்லச் சிரிக்கிறான் !

குழந்தைகளின் உலகம்
எவ்வளவோ அழகானது!
அங்குதான்
டூஎன்பதும்
பழம்என்பதும்
எளிதில் கடக்கவல்ல
வெறும் சொற்கள் !

No comments: