title


நித்யகன்னி

பண்டையகாலம் துவங்கி இன்று வரை பெண்கள் மீதான அடக்குமுறையும் அத்துமீறல்களும் அன்றாடம் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அது புராண, இதிகாசங்களாக இருந்தாலும், நம் வீட்டில் தெருவில் நடக்கும் சம்பவங்களாக இருப்பினும் பெண்மை எப்போதும் ஆண்மையின் ஆளுமைக்கு உட்பட்டதே என எண்ணும்படியான நிலைமைதான் தொடர்கின்றது.

இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான “மஹாபாரதமும்” இதற்கு விதிவிலக்கல்ல. எண்ணற்ற கதாபாத்திரங்கள், கண்மூடித்தனமான பக்தியை வளரவைக்கும் கதையோட்டம், ஊடே கணக்கில்லா தத்துவங்கள் என சகலமும் நிறைந்த மஹாபாரதத்தில் பெரும்பாலும் யாரும் பெரிய அளவில் கவனித்திராத ஒரு கிளைக்கதைதான் நித்யகன்னியான மாதவியின் கதை. அதை சற்றே புனைவு கலந்து மிகச்சிறந்த முறையில் பதிவுசெய்திருக்கிறார் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்.



பாரதக்கதை நடந்ததாக நம்பப்படும் காலகட்டத்துக்கும், தற்போதைய காலகட்டத்துக்கும் பெருமளவில் இடைவெளி இருப்பினும், பல வகையில் உலகம் மாறியிருந்தாலும், நாகரீகமடைந்திருந்தாலும் (குறிப்பாக) வீட்டுக்குள் பெண்களின் நிலையில் பெரியளவில் எந்தமாற்றமும் இல்லை. தகப்பனென்றும், உடன்பிறந்தவரென்றும், காதலனென்றும், கணவனென்றும் வெவ்வேறான உறவுமுறைகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் மிக குறைவான அளவே அளிக்கப்பட்டுள்ளது.

என்றுமே அழியாத இளமையை வரமாகப் பெற்றவள் நித்யகன்னி “மாதவி”. ஆனால், அந்த வரத்தின் பொருட்டே உலகத்தின் தூற்றலுக்கு ஆளாகிறாள். வரத்தை சாபம் என்றெண்ணும் நிலைக்கு அவளை ஆளாக்கியதில் தகப்பன், காதலன் மற்றும் முற்றும் துறந்த முனிவன் என எல்லாத்தரப்பும் சமபங்கு வகிக்கின்றனர். அவளின் நிலையெண்ணி அவளுக்காக பரிந்து பேசுபவர் மிகச்சொற்பமே.

சுருங்கச் சொல்லின், தன் நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாமல் போகும்வண்ணம் “வரம்” என்னும் போர்வையில் “சாபம்” பெற்ற நித்யகன்னியின் கதையை சிறப்பாக சொல்லியுள்ளார் எம்.வி.வி.


நாவல் : நித்யகன்னி (நாவல்)
எழுத்தாளர் : எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பகம் : காலச்சுவடு (கிளாசிக் வரிசை)
பக்கம் : 182
விலை : ரூ 100/-

4 comments:

Anonymous said...

thanks for putting it in the blog. bought the book today!!!

Regards,
Nithya

காளீஸ்வரன் said...

மிகச் சிறந்த புத்தகம் இது. படித்தபின் உங்கள் கருத்தைக் கூறவும்.

Anonymous said...

i was terriblly scoled for giving it my friend. she told me not to read the book. its still in the cupboard :)

காளீஸ்வரன் said...

நிலா... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான புரிதல்கள் மற்றும் ரசனைகள். அவரவர் ஜன்னலின் காற்று அவரவர்க்கே. குறைந்தபட்சம் உங்கள் தோழிக்கு ஏன் பிடிக்கவில்லை என அறியவாவது படியுங்கள். எதுவும் வீணல்ல.