title


பென்சில்

சன்னமாய் கரிராஜன் தக்கதாய்
சூழலில் மரவேலி

மன்னவன்
மக்கள் காவலன் மட்டுமல்ல...
மாபெரும் காப்பியங்கள் உரைத்தவன்...
உயிர் முழுதும் உழைப்பில் கரைத்தவன்...

தன்னுயிர் உருக்கி பிறர்க்கு
ஒளிதரும் மெழுகைப் போலவே
இவனும் தன்னுயிர் கரைத்து
பிறப்பெடுப்பான் பிறருக்காக !

சமயங்களில் பென்சில்கள் எனக்கு
பெற்றோர்கள் நினைப்புத் தரும்…

பெற்றோரும் பென்சிலும்
உழைத்து ஓடாய்த் தேய்ந்தபின்
பிள்ளைக் காவியங்கள்
வெற்றியெல்லாம் காணும்...

ஆஞ்சநேயர் போலவே தன் பலம்
அறியாத அரை பென்சில்...
அதனுள்ளே எத்தனையோ
கணக்கீடுகள் கதைகள் காவியங்கள் ....

ஒவ்வொரு முறை பென்சில்
சீவப்படும் போதும் கவனியுங்கள்
ஓராயிரம் வாட்கள் கூர்தீட்டும்
ஓசை கேட்கும்...

உலக ஆயுதங்களின்
பேரரசன் இவனே....
உண்மை அமைதிக்கும்
காவலன் இவனே....

எனக்கே எனக்காய்..

சிலகட்டுத் தாள்கள்....
கொஞ்சம் பென்சில்கள்....
பல நூறு தேசம் வென்ற
பெருமையில் லயித்திருப்பேன் !

1 comment:

Anonymous said...

ஒவ்வொரு முறை பென்சில்
சீவப்படும் போதும் கவனியுங்கள்
ஓராயிரம் வாட்கள் கூர்தீட்டும்
ஓசை கேட்கும்...
unmaiththaanga

azhakaana karppanai..

nantikkadan...