title


கொடுத்ததெல்லாம் ?!?

இன்று எங்கள் பகுதியில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா. காலையிலிருந்து ஒரே எம்.ஜி.ஆர். பாடல்களாக பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அருணாவை டென்சனாக்கிய அந்த பாடல் ஒளிபரப்பானது…

பாடல் : “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்..”
அருணா : மொதல்ல கரண்ட கொடுங்கப்பா மத்ததெல்லாம் அப்புறம் கொடுக்கலாம்

மெளனம்


ஒவ்வொருமுறையும்
மிக மூர்க்கமாய்
தாக்கப்படும் போதெல்லாம்
அமைதியே அரணாகிறது !

தர்க்கங்கள்…
கேள்விகள்…
நிறுவப்படும் உண்மைகள்…
என எதிலும் இருப்பதில்லை
வதைத்ததற்கான தடயங்கள் !

வார்த்தைகள்
குத்திக்கிழிக்கும்
குருதியின்றி காயப்படுத்தும்
என்பதை வதைப்பவர்கள்
உணர்வதுமில்லை !

கேட்கப்படும்
ஒவ்வொரு கேள்விக்கும்…
நிறுவப்படும்
ஒவ்வொரு உண்மைக்கும்
இருக்கின்றன
பதில்களும்
பதில் கேள்விகளும்…
காயப்படுத்தும் வார்த்தைகள்தான்
எல்லோரிடமும் இருப்பதில்லை !

மட்டுமல்ல…
இதற்கெல்லாம்
புறக்கணிப்பைக் காட்டிலும்
மேலான பதில்
வேறென்ன ?