மாயலோகம்


மெல்ல அருகில் வந்து
நெருங்கி அமர்ந்து
கண் பார்த்து
“அப்பா…. டூ” என்றவாறே
விலகிச் செல்கிறான் !

இரு நிமிடங்கள்
இரண்டே நொடிகள் - அல்லது
அதற்கும் குறைவான
நேரத்தில் மீண்டும்…

மெல்ல அருகில் வந்து
நெருங்கி அமர்ந்து
கண் பார்த்து
“அப்பா…. பழம்” என
மெல்லச் சிரிக்கிறான் !

குழந்தைகளின் உலகம்
எவ்வளவோ அழகானது!
அங்குதான்
“டூ” என்பதும்
“பழம்” என்பதும்
எளிதில் கடக்கவல்ல
வெறும் சொற்கள் !

No comments:

Post a Comment